கோவிலில் கொள்ளை போன சிலைகளின் விவரங்களை அதிகாரிகள் மறைக்கிறார்கள்
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் கொள்ளை போன சிலைகளின் விவரங்களை அதிகாரிகள் மறைக்கிறார்கள் எம்.ஆர். காந்தி பேட்டி.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் சாமி சிலைகள், நகைகள், உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று பா.ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி திக்குறிச்சி கோவிலுக்கு சென்றார். அங்கு சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் மிகவும் பழமையான கோவில்களில் திக்குறிச்சி மகா தேவர் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் இருந்து சிலைகள், நகைகள் கொள்ளை போயிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இங்கு கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள். ஆனால், சிலைகள் குறித்த உண்மையான விவரங்களை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மறைக்கிறார்கள்.
குமரி மாவட்டத்தில் சிலை கடத்தல் கும்பல் முகாமிட்டு ஒவ்வொரு கோவிலாக கொள்ளையடித்து வருகிறார்கள். இதை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த கொள்ளைகள் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story