தென்காசியில் சட்டப்பணிகள் கள முகாமில் நலத்திட்ட உதவி ஐகோர்ட்டு நீதிபதி வழங்கினார்


தென்காசியில் சட்டப்பணிகள் கள முகாமில் நலத்திட்ட உதவி ஐகோர்ட்டு நீதிபதி வழங்கினார்
x
தினத்தந்தி 3 Sept 2018 3:30 AM IST (Updated: 3 Sept 2018 5:34 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் தென்காசி சட்டப்பணிகள் குழு சார்பில் தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை சட்டப்பணிகள் கள முகாம் நடந்தது.

தென்காசி,

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் தென்காசி சட்டப்பணிகள் குழு சார்பில் தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை சட்டப்பணிகள் கள முகாம் நடந்தது. 

அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்கள் குறித்தும், சட்டப்படியான உரிமைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்கள் எளிதில் பயன் அடைவதற்காகவும் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதில் 27 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களுக்கு சட்ட உதவிகள் மற்றும் அரசு துறையில் உள்ள நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

முகாமில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் வரவேற்றார். சென்னை மாவட்ட நீதிபதி நஷீர் அகமது வாழ்த்தி பேசினார். இந்த முகாமில் 69 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, ஐகோர்ட்டு நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதிகள் சந்திரா, ஜெயராஜ், கிளாஸ்டன் பிளஸ்ட் தாகூர், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நீதிபதிகள் மருது பாண்டியன், பத்மநாபன், திரிவேணி, அரசு வக்கீல்கள் கார்த்திக்குமார், ராமச்சந்திரன் மற்றும் சட்டப்பணிகள் குழு வக்கீல்கள் புகழேந்தி, மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தென்காசி சார்பு நீதிபதி நாகராஜன் நன்றி கூறினார்.


Next Story