மெட்ராத்தி பகுதியில் வறட்சி நிவாரண நிதியை விரைவாக வழங்க வேண்டும், வேளாண்துறை அலுவலகத்தில் விவசாயிகள் மனு


மெட்ராத்தி பகுதியில் வறட்சி நிவாரண நிதியை விரைவாக வழங்க வேண்டும், வேளாண்துறை அலுவலகத்தில் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 4 Sept 2018 4:15 AM IST (Updated: 3 Sept 2018 7:15 PM IST)
t-max-icont-min-icon

மெட்ராத்தி பகுதியில் வறட்சி நிவாரண நிதியை விரைவாக வழங்க வேண்டும் என வேளாண்துறை அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்த்னர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மடத்துக்குளத்தை சேர்ந்த விவசாயிகள் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேளாண்துறை அலுவலகத்திற்கு சென்று, அதிகாரிகளிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

மடத்துக்குளம் அருகே உள்ள மெட்ராத்தி பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். கடந்த காலங்களில் மக்காச்சோளம் சாகுபடிசெய்தோம். வறட்சியின் காரணமாக மக்காச்சோள பயிர்கள் கருகின. இதனால் வறட்சி நிவாரண நிதி கேட்டு, விண்ணப்பித்தோம். இதில் ஒரு சிலருக்கு மட்டுமே வறட்சி நிவாரண நிதி கிடைத்துள்ளது. ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி கிடைக்கவில்லை. இதனால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்து கொண்டிருக்கிறோம். எனவே வறட்சி நிவாரண நிதியை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Next Story