மாவட்ட செய்திகள்

கோத்தகிரி அருகே வடமாநில வாலிபரை தாக்கி பணம் பறிப்பு + "||" + Near Kotagiri Attacked the youth of the northern state Money flush

கோத்தகிரி அருகே வடமாநில வாலிபரை தாக்கி பணம் பறிப்பு

கோத்தகிரி அருகே வடமாநில வாலிபரை தாக்கி பணம் பறிப்பு
கோத்தகிரி அருகே வடமாநில வாலிபரை தாக்கி பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோத்தகிரி,

அசாம் மாநிலத்தை சேர்ந்த நாகன் என்பவரின் மகன் மாணிக்(வயது 27). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு கைக்குழந்தை உள்ளது. கட்டிட தொழிலாளியான மாணிக், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மாணிக் தனது மனைவி, குழந்தை மற்றும் நண்பரான பிரசன்னா ஆகியோருடன் மூணுரோடு சாலை வழியாக அரவேணு பஜாருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அங்குள்ள டாஸ்மாக் கடை அருகில் சென்றபோது அந்த வழியாக வந்த 3 மர்ம ஆசாமிகள் திடீரென மாணிக்கை வழிமறித்தனர். பின்னர் சாலையோரத்தில் கிடந்த ஒரு செங்கலை எடுத்து அவரது முகத்தில் தாக்கினர். இதனால் நிலைகுலைந்துபோன மாணிக், காயமும் அடைந்தார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.4 ஆயிரத்து 500 மற்றும் பிரசன்னாவிடம் இருந்த ரூ.4 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் மிரட்டி பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதையடுத்து காயம் அடைந்த மாணிக், கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வடமாநில வாலிபரை தாக்கி பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. இடத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன்– தம்பிக்கு ஜெயில்; சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு
மானாமதுரை அருகே இடத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன்– தம்பிக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
2. சாராயம் காய்ச்ச கடத்தி வரப்பட்ட 4 டன் வெல்லம் பறிமுதல்; 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
மூங்கில்துறைப்பட்டு அருகே சாராயம் காய்ச்சுவதற்காக சரக்கு வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 4 டன் வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. துரைப்பாக்கத்தில் ஆட்டோ மோதி வாலிபர் பலி, டிரைவர் தற்கொலை
துரைப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ மோதி வாலிபர் பலியானார். போலீஸ் விசாரணைக்கு பயந்து ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
4. வளசரவாக்கத்தில் தற்கொலை செய்வதாக மிரட்டிய மனைவியை தீ வைத்து எரித்த கணவர்
வளசரவாக்கத்தில் தீக்குளித்து தற்கொலை செய்வதாக மிரட்டிய மனைவியை அவரது கணவர் தீ வைத்து எரித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவான கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சாவு: கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் புதிய விசாரணை அதிகாரி நியமனம்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி உயிரிழந்ததால் அந்த வழக்கை விசாரித்த கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய விசாரணை அதிகாரியாக அரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி நியமிக்கப்பட்டார்.