மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை: மொபட் மீது லாரி மோதல்; சிறுவன் பலி + "||" + Tiruvannamalai: Larry clash over Mobat; The boy kills

திருவண்ணாமலை: மொபட் மீது லாரி மோதல்; சிறுவன் பலி

திருவண்ணாமலை: மொபட் மீது லாரி மோதல்; சிறுவன் பலி
திருவண்ணாமலையில் மொபட் மீது லாரி மோதியதில் 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ஆடையூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுகிதா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், 2 வயதில் சிவநேசன் என்ற மகனும் உள்ளனர். நேற்று மாலை ரமேஷ் தனது குடும்பத்துடன் மொபட்டில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து உள்ளார். பின்னர் அவர்கள் கடை வீதிக்கு சென்றுவிட்டு இரவு 9 மணி அளவில் வீடு திரும்பி உள்ளனர்.

சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் அருகே செல்லும் போது பின்னால் வேகமாக வந்த லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் ரமேஷ், சுகிதா மற்றும் பெண் குழந்தை ஒரு புறமும், சிறுவன் சிவநேசன் ஒரு புறமும் விழுந்தனர். சிறுவனின் தலை மீது லாரி ஏறி இறங்கியதில் சிவநேசன் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்தில் ரமேஷ், சுகிதா மற்றும் அவர்களது மகள் ஆகியோருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த ரமேசும், சுகிதாவும் மகனின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். விபத்து ஏற்படுத்திய லாரி அங்கிருந்து நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுவன் சிவநேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியை போலீசார் திண்டிவனம் பைபாஸ் சாலையில் மடக்கி பிடித்து விட்டதாக கூறினர். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மத்தூர் அருகே லாரி மோதி என்ஜினீயர் பலி: மறியலில் ஈடுபட்ட 36 பேர் மீது வழக்கு
மத்தூர் அருகே லாரி மோதி என்ஜினீயர் பலியான சம்பவம் தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மறியலில் ஈடுபட்ட 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2. கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம், எ.வ.வேலு எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம், எ.வ.வேலு எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.
3. வேன் மீது லாரி மோதியது: தாய்-மகள் உள்பட 5 பேர் நசுங்கி பலி
உத்தர கன்னடா அருகே, வேன் மீது லாரி மோதிய விபத்தில் தாய்-மகள் உள்பட 5 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
4. பாகலூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல் - 11 பேர் கைது
பாகலூர் அருகே இருதரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. திருவண்ணாமலை: 3½ அடி உயர குள்ளமான பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
திருவண்ணாமலையில் 3½ அடி உயர குள்ளமான பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அருண்சந்தர் என்று பெயரிட்டு தங்க சங்கிலியை கலெக்டர் அணிவித்தார்.