சேலம் வடக்கு தொகுதி: ரூ.1.66 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


சேலம் வடக்கு தொகுதி: ரூ.1.66 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Sept 2018 5:00 AM IST (Updated: 5 Sept 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

சேலம் வடக்கு தொகுதியில் ரூ.1.66 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

சேலம்,

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னங்குறிச்சி பேரூராட்சி மக்கள் பயன்பாட்டிற்காக ரூ.21.95 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டது. இதே போன்று சேலம் மாநகருக்கு உட்பட்ட 10 மற்றும் 13-வது வார்டில் தலா ரூ.8.75 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடைகள் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா கன்னங்குறிச்சியில் நடைபெற்றது. இவற்றை சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இதே போன்று 6-வது வார்டு என்.ஜி.ஜி.ஓ. காலனியில் ரூ.11.70 லட்சத்தில் தார் சாலை, 7-வது வார்டு ரூ.7.60 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. அதே போன்று பாரதி நகரில் ரூ.3 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், 8-வது வார்டு சந்திரன் கார்டன் பகுதியில் ரூ.16.21 லட்சத்தில் தார் சாலை, வைஷ்ணவி கார்டன் பகுதியில் ரூ.10.40 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், குருக்கள் தெரு பகுதியில் ரூ.5 லட்சத்தில் தடுப்பு சுவர் ஆகியவை அமைக்கப்பட்டது.

இதே போன்று 12-வது வார்டு சக்தி நகரில் ரூ.10.40 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், 13-வது வார்டு பகுதியில் ரூ.3½ லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம், 14-வது வார்டு மக்கான் தெரு பகுதியில் ரூ.6½ லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், 15-வது வார்டு காமராஜ் காலனியில் ரூ.10 லட்சத்தில் அங்கன்வாடி மையம், 27-வது வார்டு சின்னப்பன்வீதியில் ரூ.6½ லட்சத்தில் கான்கிரீட் சாலை என மொத்தம் ரூ.1.66 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாநகர செயலாளர் ஜெயக்குமார், அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ், பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன், சாந்தமூர்த்தி, கேபிள் ராஜா, பிரகாஷ், கன்னங்குறிச்சி பேரூர் கழக செயலாளர் தமிழரசன், பொதுக்குழு உறுப்பினர் பூபதி, முன்னாள் கவுன்சிலர்கள் இளவரசன், கருணாகரன், சீனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story