மாவட்ட செய்திகள்

சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய தம்பி கைது + "||" + Brother arrested for attacking farmers in property dispute

சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய தம்பி கைது

சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய தம்பி கைது
திருக்கோவிலூர் அருகே சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய தம்பி போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருக்கோவிலூர் ,

திருக்கோவிலூரை அடுத்துள்ள திருமலைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 60) விவசாயி. இவருக்கும் இவரது தம்பி காசி (வயது 52) என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வருகின்றது. சம்பவத்தன்றும் இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு நடந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காசி அர்ஜூனன், அவரது மனைவி வீரம்மாள் மற்றும் மகளை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இது குறித்து அர்ஜூனன் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்வாசன் வழக்கு பதிவு செய்து காசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. கரூர் அருகே போலி தாசில்தார் கைது; கார் பறிமுதல்
கரூர் அருகே போலி தாசில்தார் கைது செய்யப்பட்டார். அவர் பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2. சென்னை புறநகர் பகுதிகளில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் சாலை மறியல் 1,500 பேர் கைது
சென்னை புறநகர் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் 1,500 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
3. 2-வது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் : ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 8 இடங்களில் சாலைமறியல் மாவட்டத்தில் 1,798 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதையொட்டி 8 இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 1,798 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. மாவட்டத்தில் 11 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியல் 2,989 பேர் கைது
சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2,989 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம் 1,803 பெண்கள் உள்பட 3,170 பேர் கைது
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ– ஜியோ அமைப்பு சார்பில் நேற்று 2–வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 1,803 பெண்கள் உள்பட 3,170 பேர் கைது செய்யப்பட்டனர்.