மோட்டார் சைக்கிள்கள் திருட்டு; 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருட்டு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Sept 2018 3:15 AM IST (Updated: 6 Sept 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதாக தைலாவரம் பகுதியை சேர்ந்த விஜயன் என்கிற விஜயபாஸ்கர் (வயது 31), கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த பழனி தங்கம் (20) ஆகியோரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து புத்தம் புதிய 22 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story