வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2018 10:45 PM GMT (Updated: 5 Sep 2018 8:04 PM GMT)

ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட தலைவர் குமரையா தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சம்பத் ஆர்ப்பாட்டத்தினை தொடங்கி வைத்தார். நில அளவை பிரிவு மாவட்ட தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முத்து வாழ்த்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். அரசு ஆணை 56-லிருந்து வருவாய்த்துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க வட்ட இணை செயலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார். 

Next Story