வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2018 4:00 AM IST (Updated: 6 Sept 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் புதுக்கோட்டை கிளையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் புதுக்கோட்டை கிளையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் தலைமை தங்கினார். வட்ட தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தார். இதில் தனி வருவாய் ஆய்வாளர் முருகேசன், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழரசி நன்றி கூறினார். வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story