கே.ஆர்.எஸ்., கபினி அணை: தமிழகத்திற்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது


கே.ஆர்.எஸ்., கபினி அணை: தமிழகத்திற்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது
x
தினத்தந்தி 6 Sept 2018 3:30 AM IST (Updated: 6 Sept 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது.

பெங்களூரு,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக பெய்து வந்த கனமழையால் மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ்., மைசூருவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 2 அணைகளும் 2 தடவை நிரம்பின. குடகு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் கே.ஆர்.எஸ். அணை 3-வது முறையாக கடந்த 31-ந்தேதி முழுகொள்ளளவை எட்டியது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி 124 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124.74 அடியாக இருந்தது. கடந்த 6 நாட்களாக முழுகொள்ளளவில் இருந்த கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து குறைந்த போதிலும், கணிசமான அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது குறைந்துவிட்டது. அணைக்கு வினாடிக்கு3,954 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த. அணையில் வினாடிக்கு 4,741 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,282 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 2,283.69 கனஅடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4,075 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு4,250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் நேற்றைய நிலவரப்படி இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 8,964 கனஅடி நீர் சென்று கொண்டிருந்தது.

Next Story