டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது; வாலிபர் பலி


டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது; வாலிபர் பலி
x
தினத்தந்தி 6 Sept 2018 3:30 AM IST (Updated: 6 Sept 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் நிலத்தை சமன் செய்தபோது டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கச்சிராயப்பாளையம்,


கல்வராயன்மலையில் உள்ள கெண்டிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் கணேசன்(வயது 23). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து வாடகைக்கு ஏர் உழுவது, விவசாய நிலத்தை சமன் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார். கணேசன் நேற்று மாலை வெள்ளிமலை கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டர் மூலம் மண்ணை சமன் செய்யும் பணியும் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கிய கணேசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கரியாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிள்ளிவளவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story