நடத்தையில் சந்தேகம்: மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
கள்ளக்குறிச்சியில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் அவரை தாக்கிய கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்தியமூர்த்தி(வயது 30) தொழிலாளி. இவருக்கும் பாரதி(24) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனது மனைவியின் நடத்தை மீது சத்தியமூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட பாரதி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த சத்தியமூர்த்திக்கும், பாரதிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, தனது மனைவியை ஆபாசமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.