கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது


கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 7 Sept 2018 3:45 AM IST (Updated: 7 Sept 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கீழ்வேளூரை அடுத்த விக்னாபுரம், புதுச்சேரி சுடுகாட்டு பகுதி, கீழ்வேளூர் அருகே உள்ள எறும்புகண்ணி கிராமம், காக்கழனி தோப்புத் தெரு, காக்கழனி ஆகிய பகுதிகளில் சாராயம் விற்ற ரகுமான் (வயது 30), தங்கையன் (48), தமிழ்குடிமகன் (28), வசந்தி (35), பிருந்தா (25) ஆகிய 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் அவர்கள் 5 பேர் மீதும் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 550 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story