தஞ்சையில் இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
தஞ்சை ரெயிலடியில் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெயிலடியில் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பொதுச் செயலாளர் யாதவகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகர மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அலாவுதீன், பொதுச் செயலாளர் ராம்பிரசாத், மாவட்ட பிரதிநிதி செல்வம், மாநகர இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தை தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயப்பிரிவு பொதுச் செயலாளர் ராஜமார்த்தாண்டன், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்தியஅரசு கட்டுப்படுத்த வேண்டும். கியாஸ் சிலிண்டர் விலை உயர்வையும் திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் 2 மொபட்டுகளை மாட்டு வண்டியில் ஏற்றி கொண்டு வரப்பட்டது.
இதில் மாநகர மாவட்ட வர்த்தகப்பிரிவு தலைவர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட செயலாளர் பூபதி, வட்டார தலைவர் ரவிச்சந்திரன், சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் சதா.வெங்கட்ராமன், நிர்வாகிகள் டாக்டர் ஜெகதீசன், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.