மாவட்ட செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார், பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் + "||" + Again the controversy erupted, the BJP MLA Ram katham

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார், பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம்

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார், பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம்
உயிருடன் இருக்கும் நடிகைக்கு இரங்கல் தெரிவித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
மும்பை,

மும்பையை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நடந்த உறியடி நிகழ்ச்சியில், இளைஞர்கள் விரும்பும் பெண்களை கடத்தி வந்து ஒப்படைப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில் உயிருடன் இருக்கும் நடிகைக்கு இரங்கல் செய்தி வெளியிட்டதன் மூலம் அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். ராம் கதம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இந்தி மற்றும் மராத்தியில் புகழ்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

ஆதாரமற்ற தகவல்களை வைத்து இரங்கல் செய்தி வெளியிட்ட அவரை சமூக வலைதளத்தில் பலரும் கிண்டலடித்தனர். சிலர் கண்டனமும் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் உடனடியாக தன் பதிவை திரும்பப்பெற்றுக்கொண்டார். மேலும் “நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து கடந்த 2 நாட்களாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவரின் நல்ல உடல்நிலைக்காகவும், வேகமாக குணமடையவும் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என மற்றொரு பதிவை வெளியிட்டார். 


தொடர்புடைய செய்திகள்

1. இளைஞர்களுக்காக பெண்களை கடத்துவதாக கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
இளைஞர்களுக்காக அவர்களின் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கடத்துவதாக கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதமுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய மல்யுத்த வீரர்
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி, துர்க்மெனிஸ்தான் மல்யுத்த வீரர் வெளியேற்றப்பட்டார்.
3. கேரள போலீஸ்-தமிழக அதிகாரி வாக்குவாதம் ; வாட்ஸ்-அப்பில் உலா வந்த தகவலால் சர்ச்சை
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு உபரிநீர் திறப்பது தொடர்பாக தமிழக அதிகாரியுடன் கேரள போலீஸ் அதிகாரி ஒருவர் வாக்குவாதம் செய்துள்ளார். இதில், தமிழக அதிகாரி உதவி கேட்பது போன்ற தகவல் வாட்ஸ்-அப்பில் பரவியதால் அது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
4. மராட்டியத்தை சேர்ந்த கலெக்டருக்கு தேர்தல் பணியாற்ற 5 ஆண்டு தடை - தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை
எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் சர்ச்சையில் சிக்கிய மராட்டியத்தை சேர்ந்த கலெக்டருக்கு தேர்தல் பணியாற்ற 5 ஆண்டு தடை விதித்து தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
5. சாவித்திரியை மதுவுக்கு அடிமையாக்கியவர் ஜெமினி கணேசனா?
சாவித்திரியை மதுவுக்கு அடிமையாக்கியவர் ஜெமினி கணேசனா என சர்ச்சை காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.