மசாஜ் பார்லரில் விபசாரம் : வெளிநாட்டு பெண்கள் உள்பட 5 பேர் மீட்பு


மசாஜ் பார்லரில் விபசாரம் : வெளிநாட்டு பெண்கள் உள்பட 5 பேர் மீட்பு
x
தினத்தந்தி 9 Sept 2018 4:53 AM IST (Updated: 9 Sept 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

புனே கோண்ட்வா பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் உள்ள மசாஜ் பார்லரில் விபசாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

புனே,

போலீசார் போலி வாடிக்கையாளர் ஒருவரை அங்கு அனுப்பி சோதனை செய்தனர். இதில் அந்த மசாஜ் பார்லரில் விபசாரம் நடப்பது உறுதியானது.

இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்த 3 வெளிநாட்டு பெண்கள் உள்பட 5 இளம்பெண்களை மீட்டனர்.

மேலும் மசாஜ் பார்லர் உரிமையாளர், ஏஜெண்ட் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story