சிவப்பின் சிறப்பு
சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் அதே நிற பழங்களை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது. அதில் லைகோபீன், ஆந்தோ சையானைன், பிளவனாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்திருக்கின்றன.
சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் அதே நிற பழங்களை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது. அதில் லைகோபீன், ஆந்தோ சையானைன், பிளவனாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்திருக்கின்றன. அவை இதய நோய், புற்றுநோய், ரத்த அழுத்த குறைபாடு, கண் பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டவை. குறிப்பாக அதிலிருக்கும் லைகோபீன், நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ஆனால் 95 சதவீதம்பேர் சிவப்பு, ஆரஞ்சு நிற காய்கறிகளை போதுமான அளவு உணவில் சேர்த்துக்கொள்வதில்லை என்பது தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாதுளை, சிவப்பு ஆரஞ்சு, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி, ஆப்பிள், சிவப்பு திராட்சை, சிவப்பு பேரிக்காய், சிவப்பு கொய்யா, சிவப்பு குடை மிளகாய், தக்காளி, சிவப்பு பீன்ஸ், பீட்ரூட், சிவப்பு மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, சிவப்பு முள்ளங்கி போன்ற சிவப்பு நிற காய்கறிகள், பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும். இந்த சிவப்பு நிற உணவுகளில் குறைந்த அளவே கொழுப்பு, சோடியம் போன்றவை உள்ளன. தக்காளிப்பழங்களில் அதிக அளவில் லைகோபீன் இருப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோயில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். தக்காளி பழங்களை சூப்புகளாகவோ, சாஸ்களாகவோ தயாரித்து பயன்படுத்தலாம்.
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. கெட்ட கொழுப்பையும் நீக்கிவிடும். சிகப்பு நிற செர்ரி பழங்களில் கலந்திருக்கும் ஆந்தோசையானை இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் ஆற்றல் கொண்டது. சிவப்பு குடமிளகாய் சாப்பிடுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். தர்ப்பூசணி பழங்களிலும் லைகோபீன் அதிகம் உள்ளது. அவை இதய நோய், பக்கவாதம் போன்ற அபாயங்களில் இருந்து காக்கும். காலை உணவுடன் ஸ்ட்ராபெர்ரி அல்லது செர்ரி பழங்களை சேர்த்துக்கொள்வது நல்லது. மதிய உணவுடன் தக்காளி சூப் பருகலாம். சிவப்பு குடமிளகாய், சிவப்பு முள்ளங்கி, சிவப்பு வெங்காயம் ஆகியவற்றை சாலட்டுகளாக தயார் செய்து சாப்பிடலாம்.
Related Tags :
Next Story