மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை + "||" + Rameswaram, Pamban and the fishermen did not go to the sea

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேசுவரம் பகுதி மீனவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி கட்சிகள் இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு அழைத்து விடுத்துள்ளனர். மேலும் இதற்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரம் பகுதி மீனவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்த நிலையில் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரம் மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதேபோல பாம்பனுக்கு கேரளாவில் இருந்து மீன்கள் கொள்முதல் செய்வதற்காக வரும் கம்பெனிகள் கடந்த சில நாட்களாக வரவில்லை. இதனால் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பாம்பன் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு பாம்பன் மீனவர்களும் ஆதரவு தெரிவித்து இன்று கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராமேசுவரம் பகுதியில் 800 படகுகளும், பாம்பனில் 150 படகுகளும் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல மண்டபத்தில் உள்ள அனைத்து விசைப்படகு மீனவர்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. மீனவர்களுக்கு நிவாரண தொகை கலெக்டர் சுப்பிரமணியன் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி நிவாரண தொகை வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2. இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்
இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் கார்டு, குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
3. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வராதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வராதது ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
4. பழவேற்காட்டில் மீனவர்கள் 2-வது நாளாக போராட்டம்
முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி பழவேற்காட்டில் மீனவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. உடன்குடி அருகே நிலக்கரி இறங்குதளத்தை முற்றுகையிட்ட 26 கடலோர கிராம மீனவர்கள் 1,030 பேர் மீது வழக்கு
உடன்குடி அருகே கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் நிலக்கரி இறங்கு தளத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 26 கடலோர கிராம நாட்டுப்படகு மீனவர்கள் 1,030 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.