ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுவிப்பதில் தவறில்லை - சரத்குமார் பேட்டி
ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுவிப்பதில் தவறில்லை என மதுரையில் சரத்குமார் பேட்டி அளித்தார்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது–
ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என அறிவித்தாலும் கூட அவர்கள் தண்டனையை அனுபவித்து இருக்கிறார்கள். எனவே அவர்களை விடுவிப்பதில் எந்த தவறும் இல்லை.
குட்கா ஊழல் குற்றச்சாட்டினை நிரூபித்த பிறகு ஆளும் கட்சியை பற்றி விமர்சிக்கலாம். இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியினரோடு கலந்து பேசி இறுதி கட்ட முடிவு எடுக்கப்படும். போலீஸ் அதிகாரியின் வீட்டில் சோதனை நடந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. பாராளுமன்ற தேர்தல் வரும்போது அதில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.