நாகர்கோவில்: நாகராஜா கோவிலில் மாவட்ட நீதிபதி ஆய்வு
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் மாவட்ட நீதிபதி கருப்பையா நேற்று ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்,
தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில்களில் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஆகியவை குறித்து அந்தந்த மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்யும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பழமை வாய்ந்த கோவில்களில் நீதிபதிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதேபோல நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் மிகவும் பழமை வாய்ந்தது என்பதால் மாவட்ட நீதிபதி கருப்பையா நேற்று கோவிலுக்கு சென்றார். அப்போது பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா? என்பதை குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் கோவிலுக்குள் சென்று பார்வையிட்டார். கோவில் பணியாளர்கள் முறையாக பணிக்கு வருகிறார்களா? என்பது பற்றியும் கேட்டறிந்தார். கோவிலின் தெப்பகுளம், பக்தர்களின் பொருள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது தலைமை குற்றவியல் நீதிபதி பாண்டியராஜ் உடன் இருந்தார்.

Related Tags :
Next Story