மாவட்ட செய்திகள்

முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்வெட்டு - சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை + "||" + Frequency of Power Frequency - Public request to fix

முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்வெட்டு - சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்வெட்டு - சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
கெங்கவல்லி பகுதியில் முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கெங்கவல்லி,

கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து முன்அறிவிப்பு இன்றி மின்வெட்டு செய்யப்படுகிறது. தினமும் பலமுறை இரவு, பகல் பாராமல் 3 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இதன் காரணமாக தாலூகா அலுவலக இ-சேவை மையங்களில் பொதுமக்கள் சரியான முறையில் சேவையை பெற முடிவதில்லை. விவசாய மின்வினியோக நேரமும் கணக்கிட முடியாத நிலையில், விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. முன்அறிவிப்பின்றி சீரற்ற குறைவழுத்த மின்வினியோகம் செய்யப்படுவதால் மின்சாதனங்கள் பழுதாகும் நிலையும் ஏற்படுகிறது.


தற்போது மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் இரவு நேரங்களில் மின்தடையால் அவர்கள் படிக்க முடியவில்லை என தெரிவிக்கின்றனர். மேலும் தொழில்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அடிக்கடி ஏற்படும் மின் வெட்டினை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.