மாவட்ட செய்திகள்

இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி + "||" + The teenager tried to commit suicide by drinking poison

இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி
பண்ருட்டி அருகே இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள மேல்காங்கேயன்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 29), கூலி தொழிலாளி. இவருக்கு தமிழரசி(23) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த தமிழரசி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. அரசு வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சி தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
அரசு வழங்கிய இலவச பட்டா நிலத்தை அபகரிக்க முயன்று தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அஞ்சுவது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி
‘ரபேல்’ போர் விமான விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பயப்படுவது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி விடுத்தார்.
3. மேற்கு வங்காளத்தில் தொடரும் பாலம் இடிந்து விழும் சம்பவம்; இந்தியா திரும்பிய பின் மம்தா பானர்ஜி ஆய்வு
மேற்கு வங்காளத்தில் தொடரும் பாலம் இடிந்து விழும் சம்பவம் பற்றி வெளிநாட்டு பயணம் முடிந்து இந்தியா திரும்பிய பின் மம்தா பானர்ஜி ஆய்வு செய்வார் என கல்வி மந்திரி தெரிவித்துள்ளார்.
4. அந்தியூர் அருகே பரபரப்பு: 2 குழந்தைகளை வி‌ஷம் கொடுத்து கொன்றுவிட்டு தந்தை தற்கொலை முயற்சி
அந்தியூர் அருகே தொழிலாளி ஒருவர் தன்னுடைய 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.
5. கோவையில் கடன் தொல்லையால் வியாபாரி குடும்பத்தோடு தற்கொலை முயற்சி; மகன் பரிதாப சாவு
கோவையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் வியாபாரியின் மகன் பரிதாபமாக இறந்தார்.