சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் அரசு விழா: 860 பேருக்கு ரூ.65 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்


சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் அரசு விழா: 860 பேருக்கு ரூ.65 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 14 Sep 2018 10:45 PM GMT (Updated: 14 Sep 2018 4:56 PM GMT)

சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் 860 பேருக்கு ரூ.65 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

சிவகாசி,

சிவகாசி கம்மவர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 23 உழைக்கும் மகளிருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 28 பேருக்கு ரூ.58 ஆயிரத்து 840 வீதம் ரூ.16½ லட்சம் மதிப்பில் விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், சமூகநலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் 240 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனப்பொருட்கள் என மொத்தம் 291 பேருக்கு ரூ.22¼ லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற விழாவில் 47 பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானிய விலையில் இருசக்கர வாகனங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.58ஆயிரத்து 840 வீதம் ரூ.8¾ லட்சம் மதிப்பில் விலையில்லாத இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், சமூகநலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் 200 கர்ப்பிணிகளுகுகு வளைகாப்பு சீதனப்பொருட்கள் என மொத்தம் 262 பேருக்கு ரூ.20½ லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

ராஜபாளையத்தில் நடைபெற்ற விழாவில் 49 பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10½ லட்சம் மதிப்பில் விலையில்லாத இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 240 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனப்பொருட்கள் என மொத்தம் 307 பேருக்கு ரூ.22¾ லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும், 84 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொழில் தொடங்க ரூ.3 கோடியே 8 லட்சம் மதிப்பிலான வங்கிகடன் உத்தரவுகளையும், 7 நகராட்சி பகுதி அளவிலான மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3½ லட்சம் மதிப்பிலான சுழல்நிதிக்கான காசோலைக்களையும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். 3 விழாவிலும் 860 பேருக்கு ரூ.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

இந்த விழாக்களுக்கு கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் பத்மாசனி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனா ராம்கணேஷ், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story