அ.தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம்
சிங்கம்புணரி அருகே அ.தி.மு.கவினர் பிரான்மலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காக்கோட்டை ஊராட்சி செயலாளராகவும், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவக செயலாலர்களின் சங்க தலைவராக இருப்பவர் சின்னச்சாமி. இவர் நேற்று சிங்கம்புணரியை அடுத்த பிரான்மலை பகுதிக்கு சென்று அங்கு அ.தி.மு.க கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் அ.தி.மு.க. தலைமை குறித்து விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அ.தி.மு.க. கிளைச் செயலாளர் கருப்பையா தலைமையில் திரண்ட அ.தி.மு.கவினர் பிரான்மலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் சின்னச்சாமி இதுகுறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரை கிருங்காக்கோட்டை ஊராட்சியில் இருந்து பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு முறையாக தீர்வு கிடைக்காத பட்சத்தில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா மற்றும் மேலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.