மாவட்ட செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் சோனியா, ராகுல், பிரியங்கா மன்னித்து விட்டார்கள் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் + "||" + Rajiv Gandhi murder convicts 7 persons Sonia, Rahul and Priyanka have forgiven me

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் சோனியா, ராகுல், பிரியங்கா மன்னித்து விட்டார்கள் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் சோனியா, ராகுல், பிரியங்கா மன்னித்து விட்டார்கள் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் சோனியா, ராகுல், பிரியங்கா மன்னித்து விட்டார்கள் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

ஈரோடு,

ரபேல் போர் விமானம் ஊழல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஈரோட்டில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.

 அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:–

ஊழல் இல்லாத அரசை அமைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியின் ஆட்சியில் ராணுவ தளவாடங்கள், போர் விமானங்கள் வாங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்து உள்ளது. இதை கேட்டால், அவர்கள் வாங்கும் விமானங்களில்தான் ராணுவ தளவாடங்கள் இருக்கின்றன. ஏற்கனவே காங்கிரஸ் ஒப்பந்தம் செய்திருந்த விமானங்களில் ராணுவ தளவாடங்கள் இல்லை என்று பொய் சொல்கிறார்கள்.

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், போர் விமானத்துக்கு என்ன விலை கொடுத்தாலும் அதை சொல்ல முடியாது என்கிறார். விமானத்தின் பறக்கும் சக்தி உள்ளிட்ட ரகசியங்களை வேண்டுமானால் சொல்லக்கூடாது. ஆனால் விமானத்தின் விலையை சொல்வதில் எந்த சட்டச்சிக்கலும் கிடையாது.

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் பிரச்சினையை பொறுத்தவரை நாங்கள் மிகவும் தெளிவாகவே இருக்கிறோம். ஏற்கனவே சொல்லியும் விட்டோம். எங்கள் தலைவர்கள் சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் அந்த 7 பேரையும் மன்னித்து விட்டார்கள். இனிமேல் இந்த வி‌ஷயத்தில் அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.

குட்கா ஊழல் வி‌ஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே குற்றம் செய்து இருக்கிறார்கள். எனவே பதில் கூற முடியாமல் திணறுகிறார்கள். விரைவில் எல்லா அமைச்சர்களும் கம்பி எண்ணப்போவது உறுதி.

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பல இடங்களில் உள்ளது. ஆனால் மின்வெட்டு இல்லை என்று கூறியே கிராமங்களில் தினசரி 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை மின்வெட்டு செய்கிறார்கள்.

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. ராமநாதபுரம் இரட்டை கொலை: சரணடைந்த வாலிபரை காவலில் எடுத்து விசாரணை
ராமநாதபுரத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக சரணடைந்த வாலிபரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2. இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த வழக்கு; திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொலை
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே கண்மாய் பகுதியில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக இளம்பெண் கிடந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த காதலன் போலீசில் சரணடைந்தார்.
3. அலங்காநல்லூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் குத்திக் கொலை
அலங்காநல்லூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முன்விரோதத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. கந்து வட்டி கேட்டு கொலை முயற்சி செய்தவரை கைது செய்ய வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டிடம் தொழிலாளி மனு
கந்து வட்டி கேட்டு கொலை முயற்சி செய்தவரை கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் தொழிலாளி மனு கொடுத்தார்.
5. திருப்பூரில் வாய்த்தகராறில் கத்திக்குத்து காயம்பட்ட தொழிலாளி பரிதாப சாவு
திருப்பூரில் வாய்த்தகராறில் கத்திக்குத்து காயம்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.