புதுவை அருகே நடிகர் விஜய் கலந்து கொண்ட விழாவில் பரபரப்பு
புதுவையை அடுத்த பட்டானூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய் தனது மனைவியுடன் கலந்துகொண்டார்.
புதுச்சேரி,
புதுவையை அடுத்த தமிழக பகுதியான பட்டானூரில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய் தனது மனைவியுடன் கலந்துகொண்டார். நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து அவரது ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு வந்து குவிந்தனர். நடிகர் விஜய் தனது மனைவியுடன் திருமண வரவேற்பு மேடைக்கு வந்த உடன் ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு அவரை பார்க்க சென்றனர்.
பெரும்பாலானோர் விழா மேடையில் ஏறினர். சிலர் விஜய்யை காணும் ஆர்வத்தில் சேர்களின் மேல் ஏறி நின்றனர். இதனால் பெரும்பாலான சேர்கள் உடைந்து சேதம் அடைந்தன. இதனால் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்து முடியவில்லை. எனவே அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தை பார்த்த உடன் நடிகர் விஜய் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு உடனடியாக திருமண மண்டபத்தை விட்டு வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னர் விஜய் ரசிகர்கள் படிப்படியாக திருமண மண்டபத்தில் இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.