புஸ்சி ஆனந்து இல்ல திருமண வரவேற்பு விழா: நடிகர் விஜய் நேரில் வாழ்த்து
அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்து– அர்லின் உமா ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
புதுச்சேரி,
அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்து– அர்லின் உமா ஆகியோரது மகள் அங்காள பரமேஸ்வரி. இவருக்கும் புதுவை நெல்லிதோப்பை சேர்ந்த விஜயகிருஷ்ணன்– அந்தோணி அம்மாள் தம்பதியரின் மகன் அபிஜித் ஆகியோரின் திருமணம் கடந்த 12–ந் தேதி மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்தது. இவர்களது திருமண வரவேற்பு விழா புதுவை– திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. விழாவில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் முதல்–அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் எம்.எல்.ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விருத்தாசலம் தளபதி மக்கள் இயக்க ஒன்றிய தலைவர் விஜய், நகர இளைஞரணி செயலாளர் சிவா, மங்களம் பர்னிச்சர் அப்பாஸ் மற்றும் தமிழகம் மற்றும் புதுவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.