நாய் நலப் பூங்கா


நாய் நலப் பூங்கா
x
தினத்தந்தி 16 Sept 2018 1:09 PM IST (Updated: 16 Sept 2018 1:09 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் முதன் முதலாக நாய்களுக்கென்று பிரத்யேக பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் அருகே உள்ள கச்சிபோலி என்ற இடத்தில் 1.3 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா  வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு நாய்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான பாதைகள், குளிப்பதற்காக நீச்சல் குளம், விளையாட்டு உபகரணங்கள், பயிற்சி மேற்கொள்வதற்கான கட்டமைப் புகள் ஏற்படுத்தப்பட்டு ள்ளன.

சிறிய நாய்கள் மற்றும் பெரிய நாய்கள் வரை உலா வருவதற்கு ஏற்ப இடவசதிகள் அமைந்திருக் கின்றன. நாய்களின் உரிமையா ளர்கள் ஓய்வெடுப்பதற்கும் விசேஷ இருக்கைகள் அமைக் கப்பட்டுள்ளன.

சர்வதேச தரத்தில் இந்த பூங்கா அழகுற காட்சியளிக்கிறது. இந்த பூங்கா ஐதரபாத் மாநகராட்சி சார்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "இந்த பூங்கா நாய்களின் பயிற்சி மையமாகவும் செயல்படும்.

பயிற்சிக்கு பிறகு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும். நாய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிளினிக் ஒன்றும் ஏற்படுத்தப்படும். பூங்காவிற்கு பார்வையாளர்களும் வரலாம்.



அவர்கள் நாய்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் கொடுக்காத வகையில் தனி பாதைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. வெளி நாடுகளில் நாய்களுக்கு பூங்காக்கள் உள்ளன.

ஆனால் இந்தியாவில், அதுபோன்ற எந்தவித வசதிகளும் இல்லை, பொதுவாக சாதாரண பூங்காக்களில் நாய்கள் அனுமதிக்கப்படுவதும் இல்லை. அந்த குறையை போக்குவதற்காக இந்த பூங்காவைக் கட்டியிருக்கிறோம்.

இயற்கை சூழலில் இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனை உருவாக்க 6 மாதங்கள் ஆனது’’ என்கிறார்கள்.

இந்த பூங்கா விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. 

Next Story