ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதல்: தலை நசுங்கி பெண் பலி


ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதல்: தலை நசுங்கி பெண் பலி
x
தினத்தந்தி 16 Sep 2018 9:45 PM GMT (Updated: 16 Sep 2018 7:43 PM GMT)

மூணாறு அருகே ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதியதில் தலை நசுங்கி பெண் பலியானார். அவரின் கணவர் மற்றும் மகள் படுகாயம் அடைந்தனர்.

மூணாறு, 

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கட்டப்பனை அருகே ஆமகண்டம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 40). விவசாயி. நேற்று வாரவிடுமுறை என்பதால் மனோஜ் தனது மனைவி சரிதா (35), மகள் அனு (7) ஆகியோருடன் மூணாறுக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தார். அதன்படி அவர்கள் நேற்று ஒரு ஸ்கூட்டரில் மூணாறு நோக்கி சென்றனர். கொச்சி-மதுரை சாலையில் பெரியகானல் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். ஒரு வளைவில் திரும்பியபோது, மூணாறில் இருந்து சாலை பணிக்காக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி அவர்கள் வந்த ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில் மனோஜ் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது சாலையில் விழுந்த சரிதா மீது டிப்பர் லாரியின் சக்கரம் ஏறியதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சாந்தாம்பாறை போலீசார் சரிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனோஜ், அனுவை மீட்டு பூப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story