கவரப்பாளையத்தில் பெரியார், அண்ணா அரங்கம் திறப்பு விழா


கவரப்பாளையத்தில் பெரியார், அண்ணா அரங்கம் திறப்பு விழா
x
தினத்தந்தி 17 Sept 2018 3:16 AM IST (Updated: 17 Sept 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

கவரப்பாளையத்தில் பெரியார், அண்ணா அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தில் பெரியார், அண்ணா அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பேராசிரியர் மணியன் தலைமை தாங்கினார். கவிதா.ராஜேந்திரன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் கலைவாணன், திராவிடர் விடுதலை கழகம் ராவணகோபால் மற்றும் சேதுமுத்துகுமாரசாமி ஆகியோர் பேசினர்.

திராவிடர் பேரவை தலைவர் புதுவை நந்திவர்மன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா, மாநில மதிவுரைக்குழுக் தலைவர் பாலகுருசாமி மற்றும் ம.திமு.க. மாநில அமைப்புச் செயலாளர் வந்தியதேவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். முன்னதாக அன்புச்செல்வன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அரங்கம் திறக்கப்பட்டதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெருந்தலைவர் காமராஜர் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ரெங்கராஜன் எம்.பி., தந்தை பெரியார் சிலையயை திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர்.மணி, பேரறிஞர் அண்ணா சிலையை பேராசிரியர் மணியன், எம்.ஜி.ஆர். சிலையை முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா ஆகியோர் திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.

இதனை தொடர்ந்து மாலையில் சுஸ்மிதா அன்புச்செல்வன் பங்கேற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி மற்றும் டி.கே.எஸ். நாடக மன்றம் நடத்திய அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற பகுத்தறிவு நாடகம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பெரியார், அண்ணா அரங்கம் நிறுவன தலைவர் சவுந்தரராசன் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story