பின்புறம் வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யும் பா.ஜனதாவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்

பின்புறம் வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யும் பா.ஜனதாவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்
x
தினத்தந்தி 16 Sep 2018 10:00 PM GMT (Updated: 16 Sep 2018 9:49 PM GMT)

பின்புறம் வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யும், பா.ஜனதாவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று மந்திரி சிவசங்கரரெட்டி கூறினார்.

கோலார் தங்கவயல்,

பின்புறம் வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யும், பா.ஜனதாவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று மந்திரி சிவசங்கரரெட்டி கூறினார்.

பொறுத்து கொள்ள முடியவில்லை

சிக்பள்ளாப்பூரில் நேற்று கர்நாடக விவசாயத்துறை மந்திரி சிவசங்கர ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றன. கூட்டணி அரசு அமைந்து 100 நாட்களுக்கு மேல் ஆகிறது. கூட்டணி அரசு சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றி வருகிறது. இதனை பா.ஜனதாவினரால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

இதனால் மாநில அரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்

பின்புறம் வழியாக மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவினர் நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. ஆட்சியை அமைக்க பா.ஜனதாவினர் செய்து வரும் வேலைகளை மாநில மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

கூட்டணி அரசு விவசாயிகள் நலனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகள் கடனை ரத்து செய்யும் பணிகளை மாநில அரசு தீவிரமாக செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story