காவேரிப்பட்டணத்தில் டி.என்.சி. சிட்ஸ் நிறுவன 27-வது கிளை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திறந்து வைத்தார்


காவேரிப்பட்டணத்தில் டி.என்.சி. சிட்ஸ் நிறுவன 27-வது கிளை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 16 Sep 2018 11:13 PM GMT (Updated: 16 Sep 2018 11:13 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் டி.என்.சி. சிட்ஸ் நிறுவன 27-வது கிளையை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திறந்து வைத்தார்.

தர்மபுரி,

தர்மபுரியை பதிவு அலுவலகமாகவும், சென்னையை தலைமையிடமாகவும் கொண்டு கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் டி.என்.சி. சிட்ஸ் நிறுவனம் சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கோவை, ஈரோடு, தஞ்சாவூர், கடலூர் உள்பட தமிழகத்தில் 26 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது தனது 27-வது கிளையை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தொடங்கி உள்ளது.

காவேரிப்பட்டணம்-சேலம் மெயின்ரோட்டில் பாலாஜி திருமண மண்டபம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள டி.என்.சி. சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு டி.என்.சி. சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் டி.என்.சி.இளங்கோவன் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் மீனா இளங்கோவன், பிரேம், சினேகா, தர்மபுரி மண்டல பொது மேலாளர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தலைமை தாங்கி புதிய கிளையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

விழாவில் தொழிலதிபர் கே.வி.சண்முகம், ஜீவா மருத்துவமனை டாக்டர் ஸ்ரீதரன், ஜமுனா பால்கோவா உரிமையாளர் பி.டி.சுந்தரேசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆதிமகேந்திரன், சரோஜனி ஜூவல்லரி உரிமையாளர் குமார், ஆகா டெய்ரி நிர்வாகி செல்வம், சவுமியா எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ஜெயந்தி, பாக்கியலட்சுமி பைனான்ஸ் உரிமையாளர் மூர்த்தி, ஸ்ரீசரஸ்வதி பால்கோவா உரிமையாளர் தீர்த்தகிரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பால் உற்பத்தியாளர் ஜெயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிறுவனத்தின் சார்பில் விரைவில் பர்கூர், ராயக்கோட்டை, விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிய கிளைகள் தொடங்கப்பட உள்ளது என அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மண்டல பொதுமேலாளர் பிருத்திவிராஜ், கிருஷ்ணகிரி கிளை மேலாளர் கேசவன், காவேரிப்பட்டணம் கிளை பொறுப்பாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

Next Story