தமிழகத்தில் தரமற்ற நிலக்கரியை வாங்கி மின்துறையில் ஊழல்
தமிழகத்தில் தரமற்ற நிலக்கரியை வாங்கி, மின்சாரத்துறையில் ஊழல் நடந்துள்ளது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளர்.
பண்ருட்டி,
கடந்த 1987–ம் அண்டு நடந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொள்ளுக்காரன் குட்டை பகுதியில் உள்ள தேசிங்கு நினைவு இடத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, நிருபர்களிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.கூறியதாவது:–
தமிழ்நாடு முழுவதும் தற்போது மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஊழல் தான். ஏனெனில் அரசு நடத்தி வரும் அனல்மின்நிலையங்களை சரியான முறையில் பராமரிப்பு இல்லாததால், பழுதான நிலையில் உள்ளது. தனியார் மின்சார நிலையங்களில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் அதிக விலைக்கு வாங்கப்பட்டு உள்ளது. அதோடு தரமற்ற நிலக்கரியை வாங்கி ஊழல் நடந்துள்ளது. மேலும் மின்சாரத்துறை நஷ்டத்தில் இருப்பதால், காற்றாலைகள் மூலம் பெறப்பட்டு வந்த, மின்சாரத்திற்கு கடந்த 2 மாதங்களாக அரசு கட்டணம் செலுத்தவில்லை.
உயர்கல்விக்கு 11–ம் வகுப்பு மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படாது என்ற அரசு அறிவிப்பு, மா£ணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றமடைய செய்துள்ளது. ஆகையால் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்யும் முடிவை கவர்னர் தாமதப்படுத்தக்கூடாது. உடனடியாக அவர்களை விடுதலை செய்திட வேண்டும்.
இவவாறு அவர் கூறினார்.
இதில மாநில வன்னியர் சங்க செயலாளர் பு.தா.அருள்மொழி, பா.ம.க. மாநில துணை பொது செயலாளர்கள் பழ.தாமரைக்கண்ணன், அசோக், மாவட்ட செயலாளர்கள் சமட்டிக்குப்பம் ஆறுமுகம், சன்.முத்துக்கிருஷ்ணன், சுரேஷ், முருகன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பண்ருட்டி குபேரன், மாநில துணை தலைவர்கள் முத்துவைத்திலிங்கம், முருகவேல், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் எழிலரசி ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் கோ.ஜெகன், மாநில இளைஞர் சங்க துணைத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் சங்க தலைவர் ராஜேந்திரன், பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் திலகர், தொகுதி அமைப்பு செயலாளர்கள் நந்தல், வள்ளல், வேல்முருகன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், தங்கவேல், செல்வம், மணிவாசகம், செல்வக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கபடிபாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் எழிலரசன், பார்த்திக், இளைஞரணி பாலகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.