சாத்தான்குளம் அருகே கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது
சாத்தான்குளம் அருகே காதலிக்குமாறு தொந்தரவு செய்து கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய மாணவரை போலீசார் கைது செய்தனர்.
தட்டார்மடம்,
சாத்தான்குளம் அருகே காதலிக்குமாறு தொந்தரவு செய்து கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய மாணவரை போலீசார் கைது செய்தனர்.
ஒருதலை காதல்சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளையைச் சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் ரவிகுமார் (வயது 20). இவர் சாத்தான்குளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அதே கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வரும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார்.
மாணவி தற்கொலை முயற்சிநேற்று முன்தினம் மாலையில் கல்லூரி முடிந்ததும் ரவிகுமார், அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி, கல்லூரியின் முதலாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். அவர் குதித்த இடமானது மண் தரையாக இருந்ததால், அதிர்ஷ்டவமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
மாணவர் கைதுஇதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மாணவியை அவதூறாக பேசி, தற்கொலைக்கு தூண்டியதாக ரவிகுமாரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே ரவிகுமாரின் தந்தை முத்து, இடைச்சிவிளை பகுதியில் மது விற்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 48 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.