ஓசூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்


ஓசூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2018 4:15 AM IST (Updated: 19 Sept 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓசூர்,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஓசூர் நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் வேப்பனபள்ளி முருகன் எம்.எல்.ஏ, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் உள்பட பலர் பேசினார்கள்.

சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில துணை செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஞானசேகரன், ஓசூர் நகர துணை செயலாளர் திம்மராஜ், பொருளாளர் சென்னீரப்பா, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் சிவசங்கர், தொழிலதிபர் ஆனந்தய்யா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story