மருத்துவ முகாம்களில் 18 ஆயிரம் கால்நடைகளுக்கு சிகிச்சை - கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை மருத்துவ முகாம்களில் 18 ஆயிரம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த தேவசமுத்திரம் கிராமத்தில் 33-வது கால்நடை பாதுகாப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் இளங்கோ, துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ், உதவி இயக்குனர் டாக்டர் மரியம்சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 21-ந் தேதி வரை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதே போல மாவட்டத்தில் இதுநாள் வரை 32 கால்நடை பாதுகாப்பு மருத்துவ முகாம்களில், 18 ஆயிரம் ஆடு, மாடு, கன்றுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில், தடுப்பூசி, மலட்டு நீக்கம் செய்தல், செயற்கைமுறை கருவூட்டல் செய்தல், ஸ்கேன் செய்தல், மற்றும் சினை பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. கிராமப்புறங்களில் நடைபெறும் இந்த கால்நடை மருத்துவ முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டு தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்துக்கொள்ள வேண்டும். இதே போல கோமாரி நோய்க்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் பிரபாகர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள் சந்தோஷ், சிவரஞ்சனி உள்பட 4 மருத்துவக்குழுக்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story