ரூ.7¾ லட்சம் போதை பாக்குகள் பறிமுதல்
தானேயில் 2 குடோன்களில் இருந்து ரூ.7¾ லட்சம் போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தானே,
தானே, பிவண்டி நகர் பகுதியில் உள்ள கடைகளில் குட்கா போதை பாக்குகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த கடைகளுக்கு சொந்தமான குடோன்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் அங்கு ரூ. 7 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள குட்கா போதை பாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அந்த பகுதியில் மாணவர்களிடம் போதை பாக்குகள் விற்பனை செய்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள போதை பாக்குகள் கைப்பற்றப்பட்டன.
இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story