மும்பையின் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் காங்கிரஸ் கோரிக்கை


மும்பையின் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் காங்கிரஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Sept 2018 4:46 AM IST (Updated: 19 Sept 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தின் 15-வது நிதி கமிஷனில் மும்பையின் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தின் 15-வது நிதி கமிஷன் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.கே.சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷனிடம் மராட்டிய காங்கிரஸ் கமிட்டி மனு ஒன்றை அளித்துள்ளது.

இதில், நேரடி வரி வசூல் மூலம் மும்பையில் இருந்து மட்டும் ரூ. 3.14 லட்சம் கோடி நாட்டிற்கு கிடைக்கிறது. இருப்பினும் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்றபடி இங்கு உள்கட்டமைப்புகள் இல்லை. எனவே 15-வது நிதி கமிஷனில் மும்பை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

குறிப்பாக சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் போன்ற போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி வசூலில் மராட்டியம் முதல் இடத்தை வகிக்கிறது. இது 2017-18-ம் நிதியாண்டில் 28 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இருப்பினும் மாநில கடன் சுமை ரூ. 4.61 லட்சம் கோடியாகும், நிதி பற்றாக்குறை ரூ. 50 ஆயிரத்து 586 கோடியாகவும் உள்ளது. இதை கருத்தில் கொண்டு வருவாய் பற்றாக்குறைக்கான மானியம் கோர மராட்டிய மாநிலத்திற்கு முழு உரிமை உள்ளது. எனவே நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் அதிக நிதி கேட்டு பெறவேண்டும்.

இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story