தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.25 கோடி செலவில் சாலைகள் மேம்பாடு ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.25 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.25 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
சாலை பணிகள்தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், மாநகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிக்காகவும், ரூ.25 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி சாலைகளை மேம்படுத்தும் பணி தொடங்கி, நடந்து வருகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.11 கோடி செலவில் 25 வார்டுகளில் 27 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது.
21 வார்டுகளில்...இதன் தொடர்ச்சியாக மேலும் 21 வார்டுகளில் ரூ.12 கோடி செலவில் 29 சாலை பணிகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.