2 மாத சம்பளம் வழங்கவில்லை: துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


2 மாத சம்பளம் வழங்கவில்லை: துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 20 Sept 2018 4:15 AM IST (Updated: 20 Sept 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

2 மாத சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ராமநாதபுரம்,

ராமேசுவரம் நகரசபையில் ஒப்பந்த முறையில் துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றி வரும் 68 பேர் நேற்று தூய்மை தொழிலாளர்கள் சங்க தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

 ராமேசுவரம் நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றி வரும் எங்களுக்கு கடந்த மே, ஜூன் மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக நகரசபை ஆணையாளரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வறுமையில் வாடிவரும் துப்புரவு தொழிலாளர்களான தங்களுக்கு 2 மாத சம்பளம் தராததால் வட்டிக்கு கடன் வாங்கி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டோம். தற்போது கடன் தொகை அதிகரித்துவிட்டதால் செலுத்த முடியாமல் அவதி அடைந்து வருகிறோம்.

முதல்–அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உடனடியாக எங்களுக்கு வழங்க வேண்டிய 2 மாத சம்பள தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


Next Story