தமிழகத்தில் அடிமை அரசு இருப்பதால் எச்.ராஜாவை கைது செய்யமாட்டார்கள் - டி.டி.வி. தினகரன்
தமிழகத்தில் அடிமை அரசு இருப்பதால் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய எச்.ராஜாவை போலீசார் கைது செய்யமாட்டார்கள் என்று பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின் டி.டி.வி. தினகரன் கூறினார்.
பெங்களூரு,
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரன் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார்.
மதியம் சுமார் 12.40 மணிக்கு சிறைக்குள் சென்ற டி.டி.வி. தினகரன் மதியம் 2.10 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கின் விசாரணை கடந்த 31-ந் தேதி முடிவடைந்தது. கோர்ட்டு தினமும் பல வழக்குகளை சந்திக்கிறது. இதனால் தீர்ப்பு எப்போது வரும் என்பதை கூற முடியாது. குறிப்பிட்ட காலத்துக்குள் குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பை கூற வேண்டும் என்று சட்டமும் இல்லை. இதை கூற யாருக்கும் அதிகாரமும் இல்லை. இருப்பினும் 3-வது நீதிபதி வழங்கும் தீர்ப்பு நல்ல தீர்ப்பாக அமையும்.
சசிகலா சிறையில் நலமாக இருக்கிறார். அவருடைய உடல்நலம் குறித்து வரும் தகவல்கள் வதந்தி. சிறையில் சசிகலா கன்னடம்-இந்தி மொழிகள் கற்பது பற்றி நான் எதுவும் அவரிடம் கேட்கவில்லை.
நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசும் எச்.ராஜாவை தமிழக போலீசார் கைது செய்யமாட்டார்கள். ஆர்.பி.உதய்குமார், பாண்டியராஜன் ஆகியோர் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக ஏதேதோ பேசுவார்கள். இவர்களின் பேச்சுக்கு மக்களிடம் மரியாதை இல்லை.
தூத்துக்குடியில் தூயகாற்று, குடிநீர் இல்லை எனக்கூறி போராடிய பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனால், உணர்ச்சிவசப்பட்டு குரல் எழுப்பிய சோபியாவை கைது செய்ய காட்டிய வேகத்தை எச்.ராஜா விவகாரத்தில் தமிழக போலீசார் காட்டவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் அடிமை அரசு உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பது தவறான முடிவு. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும். சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு செலவாகும் ரூ.10 ஆயிரம் கோடியை கொண்டு மாநில சாலைகளை சீர்செய்யலாம். கர்நாடகத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரை சேமிப்பதற்கு திட்டங்கள் தீட்டலாம். அத்துடன், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற செலவிடலாம். தொழிற்சாலைகள் கொண்டுவருவதாக கூறி புதிய திட்டங்களை கொண்டு வந்தால் தமிழகம் சோமாலியாவாக மாறும். ஒவ்வொரு பொழுதும் இன்று என்ன திட்டத்தை அறிவிக்க உள்ளார்கள் என்ற அச்சத்தோடு தான் விடிகிறது.
தமிழகத்தில் நர்சிங் படிப்புக்கு ‘நீட்’ தேர்வு தேவையற்றது. தமிழக மக்கள் இயற்கையிலேயே அமைதியானவர்கள். இதனால், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில பிரச்சினைகள் போலீஸ்காரர்களால் தான் உருவாகவே செய்கிறது. தமிழக டி.ஜி.பி. மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இது தவறான முன்உதாரணம்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் மீண்டும் வெற்றிபெற்று பதவி பெற நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கோவில் கோவிலாக செல்கிறார். பதவிக்காக அவர் பா.ஜனதா வேட்பாளராக கூட மாறிவிடுவார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். அடுத்த மாதம் (அக்டோபர்) மாதம் 30-ந் தேதிக்குள் இந்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை எட்டிவிடுவோம். வருகிற 7-ந் தேதி திருப்பரங்குன்றத்திலும், 10-ந் தேதி திருவாரூரிலும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளை தொடங்கி உள்ளோம். எங்கள் கட்சியில் போட்டியிட வயது ஒரு தடை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story