பெரியபாளையம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 5 பெண்கள் கைது


பெரியபாளையம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 5 பெண்கள் கைது
x
தினத்தந்தி 20 Sept 2018 4:24 AM IST (Updated: 20 Sept 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

பெரியபாளையம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மொண்ணவேடு மற்றும் எரையூர் சுற்று வட்டார பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தில்லை நடராஜனுக்கு தொடந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், அழகேசன் மேற்குறிப்பிட்ட பகுதிக்கு நேற்று முன்தினம் சென்றனர்.

அப்போது அங்கு திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் மொண்ணவேடுபேட்டை பகுதியை சேர்ந்தவர்களான ஞானதீபம் என்ற கருப்பாயி (வயது 51), சுமதி (40), வெங்கட்டம்மாள் (45), எரையூரை சேர்ந்தவர்களான மோகனா (38), ஜெயந்தி (35) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 120 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்ரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story