பொன்னேரி நெடுஞ்சாலையில் பாலம் அமைப்பதற்காக தோண்டிய பள்ளத்தை சீரமைக்க வேண்டும்
பொன்னேரி நெடுஞ்சாலையில் பாலம் அமைப்பதற்காக தோண்டிய பள்ளத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி,
பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 90 சதவீத பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பொன்னேரி பஜார் பகுதியில் உள்ள வங்கியின் எதிரே சாலைக்கு அடியில் செல்லும் சிறுபாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டி பணிகளை நிறைவு செய்யாமல் விட்டுள்ளனர்.
இந்த சாலையில் ஏராளமான அரசு பஸ்கள், கனரக வாகனங்கள், இருச்சக்கர வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் விரிவாக்கப்பணி முழுமை பெறாததால் போக்குவரத்து பாதிப்பால் அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story