தலைஞாயிறு பகுதியில் மானாவாரி சாகுபடிக்கு 32 டன் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது: வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

தலைஞாயிறு பகுதியில் மானாவாரி சாகுபடிக்கு 32 டன் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று வேளாண்மை உதவி இயக்குனர் ஸ்டீபன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
வாய்மேடு,
நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 11 ஆயிரம் எக்டேர் சாகுபடி பரப்பில் ஆற்றுப்பாசன பகுதியான 7,069 எக்டேரில் நேரடி நெல் விதைப்பு முடிந்துவிட்டது. மானாவாரி பகுதியான 3,931 எக்டேர் சம்பா சாகுபடி செய்ய வேண்டியது உள்ளது. இந்தநிலையில் தலைஞாயிறு 4-ம்சேத்தி, 3-ம் சேத்தி, தாமரைப்புலம், நாலுவேதபதி, கோவில்பத்து, உம்பளச்சேரி பகுதியில் உள்ள விவசாயிகள் மானாவாரி சாகுபடிக்காக மத்திய கால மற்றும் குறுகிய கால நெல்விதைகள் வாங்கி சாகுபடி செய்யும் வகையில், தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 32 டன் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு ஏற்ப நேரடிநெல் விதைப்பு மற்றும் நடவுபணிகளை வருகிற அக்டோபர் 15-ந்தேதிக்குள் செய்துமுடிக்கவேண்டும். மேலும் விசாயிகள் மானாவாரி சாகுபடியை மேற்கொள்ள வேளாண்மைத்துறையில் உள்ள விதைநெல்களை வாங்கி பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதில் வேளாண்மை துணை அலுவலர் ஜீவகன், உதவிவிதை அலுவலர் ரவி, ஜீவானந்தம், வேளாண்மை உதவி அலுவலர்கள் ரவிச்சந்திரன்,ஆறுமுகம்,ரம்யாஆகியோர் இருந்தனர்.
Related Tags :
Next Story