திருச்செந்தூரில் கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் சி.பா.ஆதித்தனார்–பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு
திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.
திருச்செந்தூர்,
திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.
பிறந்தநாள் விழாதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பயின்றோர் கழகம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான வினாடி– வினா மற்றும் பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற உள்ளன. வருகிற 24–ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 2 மணிக்கு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெறும் வினாடி– வினா போட்டியை வணிக நிர்வாகவியல் துறை தலைவர் நாராயணராஜன் தொடங்கி வைக்கிறார். முதல் பரிசாக ரூ.1,500, 2–ம் பரிசாக ரூ.1000, 3–ம் பரிசாக ரூ.500 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
பேச்சுப்போட்டிதொடர்ந்து வருகிற 26–ந் தேதி (புதன்கிழமை) மதியம் 2 மணிக்கு நடைபெறும் பேச்சுப்போட்டிக்கு “தமிழர் வரலாற்றில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்“ மற்றும் “கல்விப்பணியில் பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார்“ என்ற 2 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து பேச வேண்டும். முதல் பரிசாக ரூ.1000, 2–ம் பரிசாக ரூ.750, 3–ம் பரிசாக ரூ.500 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வருகிற 27–ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் 2 மணிக்கு கல்லூரியில் நடைபெறும் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மகேந்திரன், பயின்றோர் கழக இணைச் செயலர் கதிரேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.