கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது தவறி விழுந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் பலி


கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது தவறி விழுந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் பலி
x
தினத்தந்தி 22 Sept 2018 3:45 AM IST (Updated: 21 Sept 2018 11:07 PM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது தவறி விழுந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 55). தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணறு ஒன்றில் ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. நேற்று முன்தினம் கிணறு ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பணி முடிந்து, இரும்பு ரோப் மூலம் இணைக்கப்பட்டிருந்த கூடையில் அமர்ந்து கிணற்றிலிருந்து மேலே வந்த போது, பாரம் தாங்காமல் எதிர்பாராதவிதமாக கூடை கவிழ்ந்தது.

இதில் தடுமாறி 2 தொழிலாளர்கள் கிணற்றுக்குள் விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார்(55), சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தங்கராசு(48) என்பவர் படுகாயமடைந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கிணற்றின் உரிமையாளர் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்ள போலீஸ் நிலையத்தை குடும்பத்தினர் முற்றுகையிட சென்றனர். அப்போது போலீசார் அவர்களிடம் நஷ்டஈடு பெற்று தர நடவடிக்கை எடுக் கப்படும் என்று கூறியதை தொடர்ந்து முற்றுகை யிடாமல் கலைந்து சென்றனர்.

பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து ஜெயக்குமார், தங்கராசு ஆகியோரின் உடல்கள், அவர் களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த தங்கராசுக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஜெயக்குமாருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story