மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசாரம்


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசாரம்
x
தினத்தந்தி 22 Sept 2018 4:30 AM IST (Updated: 22 Sept 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசார இயக்கம் நடத்தினர்.

தர்மபுரி,

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் பிரசார இயக்கம் இந்தியாவை பாதுகாப்போம், இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு வேலூரில் தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் இந்த பிரசார குழுவினருக்கு மாவட்ட செயலாளர் தேவராசன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப் பட்டது.

இந்த பிரசார குழுவில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நஞ்சப்பன், சேதுராமன், விவசாய சங்க மாநில செயலாளர் துரைமாணிக்கம், தேவதாஸ், தங்கவேல், திருநாவுக்கரசு, மாணவர் பெருமன்ற மாநில தலைவர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்தும், ஏழை, எளிய மக்களின் கோரிக்கைகள் குறித் தும் விளக்கி பேசினார்கள்.

இந்த பிரசார குழுவினர் காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, நாகதாசம்பட்டி, பி.அக்ரஹாரம், பென்னாகரம், இண்டூர் ஆகிய இடங்களில் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி பேசினார்கள். இதைத்தொடர்ந்து தொலைபேசி நிலையம் அருகே பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன், மாவட்ட செயலாளர் குமார் உள்பட திரளானோர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த பிரசார குழுவினர் நல்லம்பள்ளி, தொப்பூர் வழியாக சேலம் மாவட்டத்திற்கு சென்றனர்.


Next Story