ரூ.5 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை - மனைவி மீது டிரைவர் புகார்


ரூ.5 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை - மனைவி மீது டிரைவர் புகார்
x
தினத்தந்தி 21 Sep 2018 10:45 PM GMT (Updated: 2018-09-22T03:37:03+05:30)

ரூ.5 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை செய்ததாக மனைவி மீது டிரைவர் புகார் தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள புதுச்சாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பாலு(வயது 50), லாரி டிரைவர். இவர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் ஜகநாதனை சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:- நான் மேச்சேரி சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த ராணி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டேன். அவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கொண்டதில் 3 குழந்தைகள் உள்ளனர். எனக்கும் ராணிக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தையை அவர் எனக்கு தெரியாமல் டாக்டர் ஒருவருக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்றார். பின்னர் ராணியே குழந்தையை மீட்டு தரக்கோரி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அந்த குழந்தையை மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர். தற்போது அந்த குழந்தையை மீண்டும் எனது மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் சேர்ந்து ரூ.5 லட்சத்துக்கு வேறு ஒருவருக்கு விற்று விட்டனர்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விரைவில் எனது குழந்தையை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.


Next Story