ரூ.1¼ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வாலிபர் கைது


ரூ.1¼ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2018 3:53 AM IST (Updated: 22 Sept 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

செங்கிப்பட்டியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.1¼ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் ஊழியர்களை தாக்கிவிட்டு ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இந்த கொள்ளையில் தொடர்புடைய பட்டுக்கோட்டை அருகே உள்ள நம்பிவயலை சேர்ந்த உதயநிதி (வயது23) என்பவரை செங்கிப்பட்டி போலீசார் செங்கிப்பட்டி பழைய காசநோய் மருத்துவமனை அருகே உள்ள பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

உதயநிதி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story